Paarvai Tholaiththavargal / பார்வை தொலைத்தவர்கள்
கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு போர்த்துக்கீசியர். கவிஞர், நாவாலாசிரியர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இந்த உலகத்தை, ‘மொத்தமுமே பார்வையற்ற குருடர்களின் உலகம்’ என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு தனி மனிதன் (38 வயதினன்) கார் ஓட்டிச் செல்கையில் திடீரென்று பார்வையை இழக்கிறான். அவன் காரைத் திருடிச் செல்லும் திருடனும் குருடாகிறான். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரும் குருடாகிறார். மொத்த உலகமே பார்க்கிற திறன் இழந்து விடுகிறது. இந்த சிம்பாலிஸம் மூலமாக மனித மனத்தின் சகல பரிமாணங்களையும் ஆசிரியர் அலசுகிறார். ‘பக்கங்கள் தாண்டும் பத்திகள். உரையாடல்களை தனித் தனியே பிரிக்காத ஆசிரியரின் சிக்கனமான நடை இவற்றைத் தமிழில் தருவது தமிழ்ச் சூழலில் எவ்வளவு சாத்தியம்? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட மொழிபெயர்ப்பாளர் திறன்பட மூலநூலின் சுவை குன்றாமல் தமிழில் தந்திருக்கிறார்.
Keine Bewertungen gefunden