Paarthiniyam / பார்த்தீனியம்
அண்மைக்காலத்து வரலாற்றில், இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம்- காதல் வாழ்வை, சமூக வாழ்வை, அன்பை, குடும்ப உறவுகளைச் சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.
தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனங் கசியும் விதமாக, ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிரில் கலந்த உறவுகளை, சமூக நேசத்தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுகால ஈழத்தமிழ் வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்து கண்முன்னும் நம் மனச்சாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.
உலகத்தின் யுத்தகாலப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பலகாலம் பேசப்படும்.
-பிரபஞ்சன்
Keine Bewertungen gefunden