Kan theriyatha isaingan / கண் தெரியாத இசைஞன்
பிறவிக் குருடனான அவன் உலகத்தை உணர்வதற்கு இயற்கை ஏராளமான வாசல்களைத் திறந்தது. அவன் குழந்தையாக வளரும்பொழுதே, அத்தகையதொரு உணர்வின் வாசல் வழியாக இது அம்மா, இது மாமா, இது பழகியவர், இது புதியவர் என்பதை அவர்களது முகத்தின் மீதாகப் படர்ந்து நகரும் அவனது பிஞ்சு விரல்களே கண்கள் போலமைந்து அவர்களை அறிய உதவியது. சிறுவனாகையில், அவனது சூழலின் எல்லா திசைகளிலிருந்தும் வெவ்வேறு வகைப்பட்ட ஓசைகள் அவனது காதுகளை வந்தடைந்தபடியே இருந்தன.அம்மாதிரியான ஒலிக்குப்பைகளுள் ஒன்றாக அவனிடம் வந்து சேர்கிறது ஒரு நாட்டுப்புறத்தவனின் குழலிசை. மாலை வேளைகளில் அவனுக்குள் நிரம்பும் அந்த இனிய லயம் அவனை இசையின் திசையில் இட்டுச்செல்கிறது.அவன் சுய அனுபவங்களாக எதிர்கொள்ளும் நேசம், அழுகை, ஆற்றாமை, கடுமை, துயரம், மகிழ்வு, நம்பிக்கையின்மை, பயம் யாவற்றையும் இசையாக்குகிறான்.விளாதீமிர் கொரலேன்கோ ‘கண்தெரியாத இசைஞன்’ என்னும் இந்த நாவலை கவித்துவம் மற்றும் உளவியல் நுட்பம் இவற்றால் உன்னத கலைப்படைப்பாகத் தந்துள்ளார்.
Keine Bewertungen gefunden