Kalvi oor arasiyal / கல்வி ஓர் அரசியல்
Using trackable delivery services, your order will be delivered on time. Across Germany, all orders over 45.00 Euro are delivered free of charge. The delivery charge for orders containing less than 45.00 Euros is 3.99 Euros.
வகுப்பறைகளை ஆட்டிப் படைக்கும் சக்திகள் குறித்த நூல்கள் போதுமான அளவில் இல்லை. இந்த வகையான நூல் எழுதுவதற்கு அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. பல்வேறு கல்விக்கொள்கைகள், கமிஷன் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், திட்டங்கள், கல்வி தொடர்பான போராட்டங்கள்- இவை குறித்த விரிவான அறிவும் புரிதலும் அதற்குத் தேவை. எனவேதான் பேராசிரியர் வசந்திதேவியின் ‘கல்வி – ஓர் அரசியல்’ நூலை முக்கியமான நூலாக நான் கருதுகிறேன். பல வகையான பேதங்கள், பேதைமைகள், வன்முறைகள், அதிகாரங்கள், ஏற்றத்தாழ்வுகள்… இவற்றில் சிக்கி கல்வி அமைப்பு திணறுவதைக் கூர்மையாகவும், ஆழமாகவும் விவாதிக்கும் ‘கல்வி – ஓர் அரசியல்’ நூலினை மனதார வரவேற்போம். இது முழுமையான கல்வி வரலாற்று நூல். வசந்திதேவியின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகுக்குக் குழந்தைகள் பலியிடப்பட்ட வரலாறு!’ – ச.மாடசாமி
No reviews found